இந்தியா

தடுப்பூசியில் முன்னுரிமை, இல்லையேல் பணியை நிறுத்திவிடுவோம் - இந்திய விமானிகள் சங்கம்

webteam

தடுப்பூசியில் முன்னுரிமை தரவில்லைவில்லை என்றால் நாங்கள் பணியை நிறுத்த நேரிடும் என இந்தியா விமானிகள் சங்கம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்தியா விமானிகள் சங்கம் கூறியதாவது, “ பறக்கும் குழுவினர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. அதில் பெரும்பான்மையான பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கும், நிர்வாக பணிகளில் ஈடுபவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது ஆபத்தான சூழ்நிலையில் விமானிகள் ஆற்றும் கடமையை உயர்மட்ட நிர்வாகம் கேலி செய்வது போல் உள்ளது.

வந்தே மாதரம் மிஷன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் சீராக நடைபெற்று வருகிறது. இருப்பினும் எங்கள் மீது ஊதியகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை, பாதுகாப்பு காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏர் இந்தியா 18 வயதுக்கு மேற்பட்ட பறக்கும் குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்களை இந்திய அளவில் அமைக்காவிட்டால் பணியை நாங்கள் நிறுத்துவோம்” என்று எச்சரித்துள்ளது.