மத்திய பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
மத்திய பட்ஜெட் 2019-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், “வருமான வரிக்கான உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு வரி சலுகை என்ற பழைய அறிவிப்பு தொடர்கிறது.
அத்துடன் 2 கோடி முதல் 5 கோடி வரை தனிநபர் வருமானம் உள்ளவர்கள் வரிவிதிப்பு ஆனது 3 சதவீதம் அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடிக்கு மேல் தனிநபர் உள்ளவர்களின் வரி விதிப்பு 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரியில் வீட்டு கடன்களுக்கு அளித்த வரி சலுகை அளவு 1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ”