இந்தியா

தமிழகத்தில் இந்த ஆண்டு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இந்த ஆண்டு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

webteam

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காலியாக உள்ளத்தொகுதிகளான குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளுக்கு தேர்தல் எப்போதும் நடக்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் தற்போது காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு அவற்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை செயலாளர் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.