இந்தியா

வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம்: மன்மோகன் சிங்

PT

இந்தியா சீனா பிரச்னை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “ கடந்த 15 ,16 ஆம் தேதிகளில் எல்லையில் நடந்த சண்டையில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நமது தாய் நாட்டிற்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகமானது வீணாகி விடக்கூடாது. இந்த விஷயத்தில் இந்திய அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக அமையும்.

சீனா கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை இந்திய எல்லைக்குட்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கையும், பாங்காங் ஏரியையும் கைப்பற்ற பல முறை இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. அதை நாம் அனுமதிக்கக்கூடாது. சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.  ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம் ஆகிவிடும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.