ராஜினாமா செய்த நிதிஷ்குமார் pt web
இந்தியா

கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணி முறிவு! - முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் I-N-D-I-A கூட்டணி தலைவர்கள் தனக்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் திரைக்குப்பின் பாஜக புள்ளிகளுடன் தொடர்பில் உள்ளதாக பிகார் தலைநகர் பாட்னாவில் பரபரப்பாக பேசப்படட்டது. அதேசமயத்தில், மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மாநில அரசியலில் புதிய திருப்பத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING | நிதிஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்றார் பீகார் ஆளுநர்

இந்நிலையில், ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், “ராஜினாமா செய்துவிட்டேன். பல்வேறு தரப்பிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையிலும், அரசியல் சூழல் காரணமாகவும் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன்.

#BREAKING | சூழ்நிலை காரணமாகவே கூட்டணி முறிவு - நிதிஷ்குமார்

லாலு காங்கிரஸ் உடனான மகா கூட்டணி ஆட்சி முறிந்துவிட்டது. விரைவில் புதிய கூட்டணியை அமைப்பேன். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார் நிதிஷ்குமார்.