பீகாரில் ‘பாதுகாப்பான நகர கண்காணிப்புத் திட்டத்தை’ அம்மாநில அரசு துவங்க உள்ளது.
பீகாரில் கடந்த சில மாதங்களாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து குற்ற நடவடிக்கைகளை குறைக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பீகார் அரசு, “பாதுகாப்பான நகர கண்காணிப்புத் திட்டத்தை” துவங்க உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கவுள்ளனர். இந்தத் திட்டம் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத்திட்டம் முதல்கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பீகார் அரசு ரூ.110 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து பாட்னாவில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாட்னா ஏற்கனவே சிசிடிவி கேமரா கண்காணிப்பில் இருப்பதாகவும். சில முக்கிய வழிபாட்டுதலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவை போக்குவரத்து சீரமைப்பிற்கும், குற்றங்களை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறினார். அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தினால் பாட்னா முழுவதும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் வரும் என தெரிவித்தார்.