இந்தியா

இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் நிதிஷ்

இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் நிதிஷ்

webteam

பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிதிஷ்குமார் அரசு இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரவுள்ளது.

இதற்காக பீகார் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பீகார் அமைச்சரவை ஒருங்கிணைப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரஜேஷ் மெரோத்ரா கூறினார். முன்னதாக நேற்று முதலமைச்சராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாரதிய ஜனதா மாநில தலைவர் சுஷில்குமார் மோடியும் பதவியேற்றுக்கொண்டனர். பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கே‌சரிநாத் திரிபாதி இரண்டு நாட்களுக்குள் அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற நிதிஷ்குமார் அரசுக்கு 122 வாக்குகள் வேண்டும். மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ள பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமாருக்கு 132 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.