இந்தியா

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி!

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி!

webteam

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்

நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக கடந்த 30 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு, ராகுல் காந்தியை தோற்கடித்த, ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. அதன் அமைச்சராக ஸ்மிருதி இரானி நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்ச ராக வி.கே.சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக, டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக  நிதின் கட்கரி இன்று முறைப் படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சிறு-குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பிரதாப் சந்திர சாரங்கியும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.