இந்தியா

நீர்வழிப் பாதைகளில் விமானப் போக்குவரத்து? நிதின் கட்கரி

webteam

நீரிலும், நிலத்திலும் இறங்கக்கூடிய ஆற்றல் கொண்ட விமானங்களை இந்தியாவுக்கு விற்க ரஷ்ய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் சில ஆர்வம் தெரிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 111 ஆறுகளை தேசிய நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் யமுனை, கங்கை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரில் இறங்கும் விமானங்களை இயக்கும் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இதற்காக 50 பேர் அமரக்கூடிய விமானங்களை வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்திருப்பதாகவும், அத்துடன் இந்தியாவிற்கு நீரிலும், நிலத்திலும் இறங்கக்கூடிய ஆற்றல் கொண்ட விமானங்களை விற்க ஜப்பானிய நிறுவனங்கள் சில ஆர்வம் தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.