பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்திப்பார் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின், முதன்முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை விவகாரங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் இடம் பெற்றுள்ளனர். அமைச்சரவை கூட்டத்திற்கு முன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துவார் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீரர்கள், அதிகாரிகள் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வு தொடர்பான முடிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.