மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
வறட்சி நிவாரணத் தொகையை அதிரிக்க வேண்டும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தில் டெல்லியில் 16-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நினைத்தால் ஒரே கையெழுத்தில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் என்று கூறி வரும் அவர்கள் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். விவசாயிகள் அமைச்சர்களை சந்தித்ததை சுட்டிக்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவும் நதிகள் இணைப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளித்தார். எனினும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை பொறுத்தவரை அரசும், அமைச்சர் உமாபாரதியும் இதில் தனி கவனத்தோடு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.