தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வதாக நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்வதே குற்றம் என கருதும் சூழல் உள்ளதால் தன்னால் சரியாக இந்தி பேச முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும், இந்தியை கற்றுக்கொள்வதை யாரும் எதிர்த்ததில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், சென்னையில் இந்தி பிரசார சபாவை எரித்தது யார்? என்றும் கேள்வி எழுப்பவே, பாஜக எம்பிக்கள் மேஜைகளை தட்டி நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.