இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2சதவீதமாக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?

கலிலுல்லா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை மீண்டும் மக்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  பொருளாதார ஆய்வறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2சதவீதமாக இருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கிறது? கொரோனா பாதிப்பிலிருந்து துறைகள் மீளப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட விவரங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.