ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் தவறு நடந்ததாக விமர்சிப்பது வெட்கக் கேடானது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரஃபேல் விமானம் வாங்கிய ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, குறிப்பட்ட ஒரு பெருவணிக நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ராணுவத்தின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் ஒப்பந்தம் முழுவதும் வெளிப்படையாக நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற விமர்சனங்கள் உண்மையில் ராணுவத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் தவறு நடந்ததாக விமர்சிப்பது வெட்கக் கேடானது என்றும் அவர் சாடியுள்ளார்.