இந்தியா

''மிரட்டப்படும் பா.ஜ.க. தொண்டர்கள்'' - நிர்மலா சீதாராமன்

webteam

மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவின் அரசியல் செயல்பாடுகளை மாநில அரசு தடுத்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையத்தில் தங்க‌ள் புகாரை சமர்ப்பித்துள்ளனர்‌. அதில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தங்களுக்கு போடும் முட்டுக்கட்டைகளை நீக்கி அங்கு நியாயமான, பாரபட்சமற்ற தேர்தல் நடத்த உதவ வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை கண்டு திரிணாமுல் கட்சி மிரண்டு போயுள்ளதாகவும் இதன் ‌காரணமாகவே அங்கு தங்கள் செயல்பாடுகள் தடுக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளையும் புகார் மனுவில் பாரதிய ஜனதா‌ பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் “ மேற்கு வங்காளத்தில் ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும் மிரட்டப்படுகிறார். பாஜக ‌உள்ளிட்ட‌ எதிர்க்கட்சித் தொண்டர்கள் முடக்கப்படுகின்றனர். இந்த சூழ்‌நிலையில்தான் மத்திய அரசால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்புகிறார் மம்தா. இது முரணாக‌ இல்லையா. மம்தா ஏற்படுத்திய அச்சுறுத்தும் சூழல் காரணமாகவே நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வர நேரிட்டது” என தெரிவித்தார்.