இந்தியா

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

webteam

நிர்பாய வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவர்களின் மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில், தூக்கு தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து, பின்னர் அதுதொடர்பான மேல்முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தண்டனையை உறுதி செய்தன.