இந்தியா

நீரவ் மோடியின் ரூ.26 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

நீரவ் மோடியின் ரூ.26 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

webteam

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதிமோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் 26 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல் சொக்சியும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். நிரவ் மோடிக்கு சொந்தமாக மராட்டிய மாநிலத்திலுள்ள சூரியமின்சக்தி ஆலையும், 134 ஏக்கர் நிலமும் முடக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான சமுத்ரா மாஹாலில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் நீரவ் மோடியின் 26 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், கைக்கடிகாரங்கள், ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ரூ1.40கோடி அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.