வைர வியாபாரி நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கியில் கோடிகணக்கில் கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாத நிலையில் நிரவ் மோடி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். ஜனவரியில் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று அவர் பெல்ஜியம், பிரான்ஸ், லண்டன் உட்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். இந்த நிலையில் நிதிமோசடி வழக்கில் விசாரணைக்கு வர மறுத்ததையடுத்து அவருடைய பாஸ்போர்ட் பிப்ரவரி மாதம் முடக்கப்பட்டது.அதன்பின்னரும் அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில் அவரிடம் பல பாஸ்போர்ட்டுகள் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இப்போது அது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் இப்போதைக்கு முடக்கப்பட்டுள்ளதே தவிர, அது இன்னும் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாகவே அவர் பல நாடுகளுக்கு செல்ல முடிவதாகவும், இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.