இந்தியா

என்.ஐ.ஏ வசம் வந்தது புல்வாமா தாக்குதல் விசாரணை

என்.ஐ.ஏ வசம் வந்தது புல்வாமா தாக்குதல் விசாரணை

rajakannan

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து என்.ஐ.ஏ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடந்த அன்றே காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதேபோல், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவும் தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு செய்து ஆதாரங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவம் என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு பிறகு என்.ஐ.ஏ வசம் விசாரணை வந்துள்ளது. இதனையடுத்து, வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ நாடு முழுவதும் தனது விசாரணையை மேற்கொள்ள உள்ளது.