இந்தியா

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்

webteam

டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்படிருந்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், டெல்லி அரசு சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, காற்றில் துகள்களின் எண்ணிக்கை 999 அளவில் இருந்து 30‌0 ஆகக் குறைந்திருப்பதால், கட்டுமானப் பணிகளை தொடர தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய‌ விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மிகமிக அபாயகரமான கட்டத்தில் இருந்து. காற்றில் 50 எண்ணிக்கையில் இருக்க வேண்டிய துகள்களில் அளவு 999 ஆக இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாநில அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள், கட்டுமான பணிகளுக்குத் தடை, ட்ரக் நுழைய தடை உள்ளிட்ட நடவடிக்கைகளால் காற்று மாசு ஓரளவு குறைந்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.