இந்தியா

கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை !

கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை !

jagadeesh

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, 3 நாள்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர்‌ நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. இந்திய பயணத்தின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், இலங்கை அதிபர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் 3 நாள்கள் பயணமாக கோத்தபய இந்தியா வருகிறார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.