இந்தியா

கங்கை ஆற்றில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை

jagadeesh

உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியில் பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஸிப்பூர் - தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் ஒரு புத்தம்புதிய மரப்பெட்டி மிதந்து வந்ததை படகோட்டிகள் பார்த்துள்ளனர். குழந்தை அழும் குரலும் கேட்டுள்ளது. மரப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்த படகோட்டிகள் அதிர்ந்து போயினர். அதில் பிறந்து மிகச்சில நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று சிவப்பு நிற பட்டுத்துணியில் சுற்றப்பட்டு கை கால்களை உதைத்தபடி இருந்தது.

பெட்டியின் காளிதேவியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. குழந்தை பிறந்த நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு காகிதம் இருந்தது. அந்தக் குழந்தையை படகோட்டிகள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உத்தரப்பிரதேச மாநில அரசே ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கங்கை நதியில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு 'கங்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.