திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தரிசனம் செய்வதற்கான முன் பதிவு இன்று தொடங்குகிறது.
இதன்படி வைகுண்ட ஏகாதசி, துவாதசி தினங்களான டிசம்பர் 29, 30 ஆம் தேதிகள் மற்றும் ஜனவரி ஒன்றாம் தேதிகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை, திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அதாவது www.ttdsevaonline.com என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று, இலவச தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தான தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.