இந்தியா

மத்திய அரசின் சொத்துக்களை பயன்படுத்தி ரூ.6 லட்சம் கோடி திரட்ட புதிய திட்டம் அறிமுகம்

Veeramani

பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசின் சொத்துக்களை பயன்படுத்தி 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்ட 'தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள்' என்ற புதிய திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமானநிலையங்கள், 40 ரயில் நிலையங்கள், 15 ரயில்வே விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வருவாய்க்காக திட்டங்களில் முதலீடு செய்யலாம். கிடங்குகள், விளையாட்டு அரங்குகள் போன்றவற்றை நீண்ட கால லீஸ் அடிப்படையில் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு- தனியார் பங்களிப்பு இருப்பதாக அமைச்சர் கூறினார். அதே நேரம் இதில் சொத்து உரிமையோ நிலமோ தனியாருக்கு சொந்தமாக வழங்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். இந்த பணமாக்கல் திட்டம் 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.