ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவின் தரத்தை உயர்த்துவதற்கான புதிய கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கே லாயக்கற்றவை என்று தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐஆர்சிடிசி புதிய உணவுக் கொள்கையை வகுத்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே சமையலறைகள் புதுப்பிக்கப்படுவதுடன், புதிதாக சமையலறைகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களில் உணவகத்துக்கான பெட்டிகளுக்கான ஒப்பந்தங்களும் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.