புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் Twitter
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

PT WEB

புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மொத்தம் 64,500 சதுர மீட்டர் இடவசதி உருவாக்கப்பட்டுள்ளது.

  • நவீன நான்கு மாடி கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள், ஆலோசனை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையில் 544 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் அமர வசதி உள்ளது.

நாடாளுமன்றம்
  • புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 888 உறுப்பினர்கள் மக்களவையில் அமரவும் 384 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமரவும் வசதி செய்யப்பட்டுள்ளது.மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • குடியரசு தலைவர் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக, மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு அமர்வுகள் நடக்கும் போது 1280 உறுப்பினர்கள் மக்களவையில் அமரும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

  • புதிய நாடாளுமன்ற வளாகத்தை கட்டமைக்க மொத்த செலவு 970 கோடி ரூபாய் என மத்திய அரசு கணித்துள்ளது.

  • புதிய நாடாளுமன்ற வளாகத்தை கட்டுமானம் செய்ய 26 ஆயிரம் டன் எஃகு மற்றும் 63 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, உரைகள் மற்றும் விவாதங்களின் மொழியாக்கங்களை கேட்க, மற்றும் நாடாளுமன்ற குழு கூட்டங்களை நடத்த நவீன வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.