ஜிஎஸ்டி வரி நடைமுறையில் 2ஆவது கட்ட சீர்திருத்தங்கள் x page
இந்தியா

8 ஆண்டுகளுக்கு பின் புதுவடிவம் பெறும் ஜிஎஸ்டி.. நாளை முதல் அமலுக்குவரும் சீர்திருத்தங்கள்!

ஜிஎஸ்டி வரி நடைமுறையில் 2ஆவது கட்ட சீர்திருத்தங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் பின்னணியை பார்ப்போம்..

PT WEB

2017 ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவு. ஜொலிக்கும் வண்ண விளக்குகளுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது இந்திய நாடாளுமன்றம். ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருவதை நாட்டிற்கு அறிவிப்பதுதான் ஆட்சிபீடம் விழாக்கோலம் பூண்டதன் பின்னணி.

அன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் மோடியும் பொத்தானை அழுத்தி தொடங்கிவைத்தனர்.

ஜிஎஸ்டி உருவாக காரணம்..

இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு தடைக்கற்களில் அதன் வரி முறையும் ஒன்றாக இருந்தது. மத்திய கலால் வரி, விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி, நுழைவு வரி பல வரிகள் இருந்தன. இது தவிர ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பெயரில் வரி போட்டு வந்தன. இத்தனை வரிகளும் நாட்டின் வணிகச்சூழலை குழப்பம் மிக்கதாக மாற்றியிருந்தன. தொழில் வளர்ச்சிக்கு இது முட்டுக்கட்டை போட்டன.

Govt of India approves 2- slabs GST rates

இந்நிலையில்தான் அனைத்து வரிகளையும் ஒருங்கிணைத்து நாடு முழுக்க சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரே வரி கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த புதிய வரியால் நடைமுறை சிக்கல்கள் எழுவதாக வணிகர்களும் தொழிற்துறையினரும் குமுறினர். தொழில்கள் நசிவதாகவும் புகார்கள் எழுந்தன. எனினும் குறைகளை அறிந்து அவ்வப்போது வரி நடைமுறைகளில் சிறுசிறு மாற்றங்களும் செய்யப்பட்டன.

கடந்த 8 ஆண்டுகள் கூறப்பட்ட குறைகள், விமர்சனங்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்களுடன் ஜிஎஸ்டியில் 2ஆவது சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.