வந்தே பாரத் முகநூல்
இந்தியா

வந்தே பாரத்|பயணச்சீட்டு முன்பதிவுசெய்யும் போது உணவு தேர்வுசெய்யவில்லையா? இது உங்களுக்குதான்!

பயணிகள் தொடர்ந்து அளிக்கும் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

PT WEB

வந்தே பாரத் ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவு தேர்வு செய்யாதவர்களுக்கு புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வந்தே பாரத் ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவுசெய்யும் போது உணவு தேர்வுசெய்யாதவர்கள், ரயிலில் ஏறிய பிறகு உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயணச்சீட்டுமுன்பதிவு செய்யும் போது உணவு தேர்வுசெய்யாத பயணிகள், ரயிலில்பயணிக்கும் போது ஐஆர்சிடிசியின் உணவுப் பொருட்கள் விற்பனை சேவைமூலம் உணவு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள்தொடர்ந்து அளிக்கும் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேசமயம், முன்பதிவின் போது உணவு தேர்வுசெய்யாத பயணிகளுக்கும் ரயிலில் சுத்தமான தரமான உணவு வழங்குவதை ஐஆர்சிடிசி உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.