இந்தியா

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

EllusamyKarthik

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான புதிய அமைச்சரவை தற்போது பதவி ஏற்று வருகிறது. 

ஜெய்ப்பூரில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்த் ராம் மேக்வால், சகுந்தலா ராவத், பிரிஜேந்திர சிங், ஓலா முராரி லால் மீனா, மகேந்திரஜீத் சிங் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா, மம்தா பூபேஷ் பைர்வா, பஜன் லால் ஜாதவ், டீகரம் ஜூலி, ராஜேந்திர குடா மற்றும் ஜாஹிதா கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.