இந்தியா

4 வண்ணங்கள்.. ஸ்போர்ட்டி லுக்.. எப்படி இருக்கிறது ஹோண்டா ஹார்னட் 2.0?

EllusamyKarthik

இன்றைய நவீன உலகின் வேகத்திற்கு ஏற்ப இயங்க நம் எல்லோருக்கும் உதவுவது இரும்பு குதிரைகளான இரு சக்கர வாகனங்கள் தான். அண்மைய காலமாக கண்ணை கவரும் வகையில் ஸ்போர்ட்ஸ் பைக்கை முன்மாதிரியாக வைத்து பல பைக்குகள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள புதிய பைக் தான் ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னட் 2.0. 

கடந்த 2015 இல் அறிமுகமான ஹார்னட் மாடல் பைக்கிற்கும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன ஹார்னட் 2.0 பைக்கிற்கும் பெரிய ஒற்றுமை எதுவுமே கிடையாது. BS6 மாடலாக 184 சிசி கொண்ட பெரிய எஞ்சின் ஹார்னட் 2.0 கொண்டுள்ளது. சேஸிஸ் உட்பட அனைத்தையும் மாற்றி பார்ப்பதற்கு ஸ்போர்ட்டி லுக் கொடுக்கிறது இந்த பைக். 

12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது. முன்பக்க உள்ள போர்க்குகள் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன. அதிகபட்சகமாக 130 கிலோ மீட்டர் வேகம் வரை இதில் பயணிக்கலாம். நான்கு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது. LED பல்புகள் இந்த பைக்கின் முகப்பு உட்பட அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்கில் வாகனத்தின் இக்னிஷன் கீ இடம்பெற்றுள்ளது. சென்னையில் இந்த பைக்கின்  EX ஷோரூம் விலை 1,30,188 ரூபாயாக உள்ளது.