lpg web
இந்தியா

அடேங்கப்பா.. LPG-காக 5 மாநிலங்களுக்கு 7000 கோடி.. 1,800 கி.மீ தொலைவில் புதிய பாதை..!

எல்பிஜி விநியோகத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 5 மாநிலங்களுக்கு இடையே 1800 கிமீ தொலைவில் பாதை அமைக்கப்பட உள்ளது..

Rishan Vengai

நாட்டில் 1,800 கி.மீ தூரத்தில் 7,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எல்பிஜி குழாய் பாதைகள் அமைக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தெலங்கானா-மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம்-உத்தராகண்ட், மஹாராஷ்டிரா-கர்நாடகா இடையே அமைக்கப்படும் இந்த திட்டம், சமையல் எரிவாயு கட்டமைப்பை 23.5% அதிகரிக்கிறது.

நாடெங்கும் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய சமையல் எரிவாயு குழாய் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது. இம்முடிவால் நாட்டின் சமையல் எரிவாயு கட்டமைப்பின் பரப்பு 23.5% விரிவடையும்.

தெலங்கானா - மஹாராஷ்ட்ரா, உத்தர பிரதேசம் - உத்தராகண்ட், மஹாராஷ்டிரா - கர்நாடகா இடையே 3 புதிய எரிவாயு குழாய் பாதைகள் அமைக்கப்படும். சாலையில் டேங்கர் லாரிகளில் கொண்டுசெல்வதை விட குழாய் மூலம் கொண்டுசெல்வது பாதுகாப்பானதாகவும் செலவு குறைவானதாகவும் விரைவானதாகவும் கருதப்படுகிறது.