இந்தியா

HDFC வங்கியில் காலாண்டு நிகர லாபம் 20.91% அதிகரிப்பு.. எத்தனை கோடிகள் தெரியுமா?

webteam

இந்தியாவில் முன்னணியில் உள்ள தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி நடப்பாண்டின் முதல் காலாண்டில் ரூ. 9,579 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய 7,729 கோடி ரூபாயை விட தற்போது 20.91 சதவிகிதம் லாபம் அதிகரித்துள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி தெரிவித்துள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் நிகர லாபம் ரூ. 10,055.18 கோடியிலிருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வங்கியின் வாராக்கடன் 1.47 சதவிகிதத்தில் இருந்து 1.28 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்தக் காலாண்டில் 10,932 பேரை புதிதாக பணியமர்த்தியுள்ளதாகவும் 36 கிளைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாகவும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானம் நடப்பு காலாண்டில் ரூ.41,560 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.36,771 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.