இந்தியா

தேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு

webteam

தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதுகுறித்து ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தது. இந்தக் கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் இந்த வரைவு கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.