நீட் தேர்வு twitter
இந்தியா

தொடர் சர்ச்சையில் நீட்.. தவறான கேள்விக்கு மதிப்பெண்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Premkumar S

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை ஆண்டு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திவருகிறது. நீட் தேர்வு தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளும் இத்தேர்வை சுற்றி வருகின்றன. இந்தசூழலில் தான், 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே-3 ம் தேதி நாடுமுழுவதும் நடைபெற்றது. இதில், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். எனினும், இத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பமாதாக நாடு முழுவதும் எழுந்த புகாரையடுத்து கடந்த ஜூன் 21-ம் இளநிலை நீட் நுழைவுத் தேர்தவை தேசிய தேர்வு முகைமை எழுந்திருக்கிறது.

நீட் தேர்வு

முன்னதாக, டெலிகிராம் செயலி நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பயன்படுத்துவதாக கூறி தேசிய தேர்வு முகையின் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் நீட் தேர்வு முடியும் வரை தற்காலிகமாக மத்திய அரசு தடை செய்தது இந்திய அளவில் பெரும் சர்ச்சகளை ஏற்படுத்தியது.

இந்தசூழலில் தான், நடந்து முடிந்திருக்கும் நீட் மறுதேர்வில் மற்றுமொரு சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 21 நடைபெற்ற நீட் மறு தேர்வில், வழங்கப்பட்ட இயற்பியல் வினாத்தாளில் 2 முக்கியமான பிழைகள் கண்டறியப்பட்டன. அதாவது, ஒரு கேள்விக்கு வழங்கப்பட்ட 4 விடைகளிலும் சரியான பதில் இல்லை.  மற்றொரு கேள்வியில் ஒரே ஒரு சரியான விடை இருக்க வேண்டிய நிலையில், இரண்டு விடைகள் (3 மற்றும் 4) சரியானவையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பதிலே இல்லாமல் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து வந்தது.

National Testing Agency

இந்தசூழலில் தான், குறிப்பிட்ட அந்தக் கேள்வி ரத்து செய்யப்படவுள்ளதாகவும், இதன்காரணமாக தேர்வெழுதிய அனைவருக்கு அந்த கேள்விக்குரிய 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் 2 பதில்கள் இருந்த கேள்வியில் 2-ல் ஒன்றை எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகைமை தெரிவித்துள்ளது.

NEET-UG தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களிளில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180  வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இத்தேர்வின் மொத்த மதிப்பெண் 720 ஆகும்.