பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நாடு தழுவிய நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டயமாக்கப்படுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 2018-19 ஆம் கல்வி ஆண்டில் இதை அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பொறியியல் இளநிலை படிப்புகளில் ஒரே நுழைவுத் தேர்வை ஏற்படுத்த அண்மையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்தக்கட்டமாக தொழில்நுட்ப கல்வி மையங்களையும் இதுபோன்ற நாடுதழுவிய நுழைவுத் தேர்வின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.