இந்தியா

நாளை நீட் தேர்வு

நாளை நீட் தேர்வு

webteam

’நீட்’ தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலே நடைபெற்று வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் அந்தப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. புதிதாக இணைந்த ‌24 நகரங்‌களுடன் சேர்த்து 104 நகரங்‌களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்திலிருந்து சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும்.