கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் நிலையில், சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 81,970 லிருந்து 85,940 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 82,941 பேருக்கு கொரோனா உள்ள நிலையில் இந்தியாவில் 85,940 பேருக்கு நோய் தொற்று இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,920 லிருந்து 30,153 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,564 பேர் குணமடைந்த நிலையில் 1,068 பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் -9,931, டெல்லி -8,895, ராஜஸ்தானில் -4,727, தெலங்கானா -1,454, ஆந்திரா -2,307, கர்நாடகா -1,056, கேரளா -576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் நிலையில், சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.