இந்தியா

சுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்

சுதந்திர தின சோதனையில் 10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல்

webteam

கடந்த 15 நாட்களுக்குள் 10 கோடி ரூபாய் வரை மதிப்பிலான போதை பொருட்களை போதை பொருள் தடுப்புப் பிரிவு துறையினர் பிடித்துள்ளனர். 

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு வந்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நாடு முழுவது சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த 15 நாட்கள் போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஏனென்றால் அவர்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின்படி சுதந்திர தினத்திற்கு முன்பு இந்தியாவில் அதிகளவில் போதைப் பொருட்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் முழு மூச்சில் இறங்கினர். 

நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 13.25 கிலோ ஓபியம், 2.09 கிலோ கொக்கைன், 13.25 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு தோராயமாக 10 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, தான் கையகப்படுத்தும் பொருட்களின் மொத்த மதிப்பை வெளியிடாது என்பதால் பிடிப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சரியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.