அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் நக்சலைட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்குதல் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை வாகனம் மீது நக்சல்கள் தாக்குதல்கள் நடத்தியதில் 8 வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். இதற்காக இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் அமித் ஷா, நமது வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிகரித்து வரும் நக்சலைட் தாக்குதல்கள் தேசப்பாதுகாப்பில் அரசின் திறமையின்மையை வெளிக்காட்டுவதாக விமர்சித்தார்.