இந்தியா

நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றியது எப்படி? கடற்படை கமாண்டர் விளக்கம்

நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றியது எப்படி? கடற்படை கமாண்டர் விளக்கம்

webteam

நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றி காப்பாற்றியது எப்படி என்று கடற்படை கமாண்டர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதுவரை 361 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 40 பேர்கள் காணாமல் போய் உள்ளனர். 87 பேர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தை யும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வரு கின்றன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய பலரை மீட்பு படையினர் மீட்டனர். அதில் ஒருவர் சஜிதா. கேரள மாநிலம் ஆலுவா அருகே வெள்ளத்தின் பாதிப்பால் வீட்டின் மொட்டை மாடியில் உயிருக்குப் போராடிய அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதை மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரில் சென்ற கடற்படையினர் கண்டு அவரை பத்திரமாக மீட்டனர். அந்தப் பெண்ணுக்கு அடுத்த அரை மணிநேரத்தில் கொச்சியில் உள்ள கடற்படை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட கடற்படையினருக்கு கேரளாவில் பாராட்டுகள் குவிந்தன. அந்த வீட்டின் மொட்டை மாடியில் ’தேங்க்ஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதி அந்த கடற்படை குழுவுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்ணையும் அவருக்குப் பிறந்த குழந்தையையும் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து கூறி விட்டு பரிசுகளை வழங்கினர். மற்றவர்களை போல நிறைமாதக் கர்ப்பிணியை ஹெலிகாப்டருக்குள் தூக்குவது எளிதானது அல்ல. 

அவரை காப்பாற்றியது எப்படி என்று அந்த ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை கமாண்டர் விஜய் வர்மா கூறும்போது, ’அது கடினமான விஷய ம்தான். முதலில் டாக்டர் மகேஷை மொட்டை மாடியில் இறக்கினோம். அவர் சஜிதாவைப் பார்த்துவிட்டு, ’உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும், எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும்’ என்றார். நிறைமாதக் கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றுவது ரிஸ்கானதுதான்.

எப்படியும் நாங்கள் இரண்டு உயிரைக் காப்பாற்ற வேண்டும். எங்கள் மனதில் அதுமட்டுமே இருந்தது. சஜிதா தைரியமாகவும் நாங்கள் சொல்வ தைக் கேட்பதாகவும் இருந்தார். மற்றவர்களை விட அதிக பாதுகாப்பாக அவரை ஹெலிகாப்டரில் ஏற்றினோம். பிறகு  உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தோம்’ என்றார்.