இந்தியா

மும்பையில் சினிமா பாணியில் வங்கிக் கொள்ளை: கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கன

மும்பையில் சினிமா பாணியில் வங்கிக் கொள்ளை: கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கன

webteam

 மும்பையில் கொள்ளையர்கள் வங்கி ஒன்றில் 3 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

நவி மும்பை பகுதியில் உள்ள ஜீனிநகரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடந்த ஞாயிறன்று 3 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை திருட, அருகில் இருந்த கடையில் இருந்து சுரங்கப்பாதை தோண்டி, வங்கி பாதுகாப்பு பெட்டக அறைக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் 30 வங்கி லாக்கர்களை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து வங்கியியை திறந்த மேலாளர்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சினிமா பாணியில் சுரங்கப்பாதை தோண்டி நூதனமான முறையில் கொள்ளை நிகழ்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். கொள்ளை நடந்த லாக்கர்களை ஆய்வு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களின் கைரேகை உட்பட பல தடயங்களை கண்டுபிடித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பிடிப்பதற்காக காவல் துறை தரப்பில் தனி குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள், ஒருவர் பின் ஒருவராக வெளியே வருவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் கொள்ளையர்களை பிடிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.