இந்தியா

கங்கையில் எங்கு நீர் குடிக்கலாம்.. குளிக்கலாம்.?

கங்கையில் எங்கு நீர் குடிக்கலாம்.. குளிக்கலாம்.?

webteam

கங்கை நதியில் குளிக்கவும் குடிப்பதற்கும் தகுதியுள்ள நீர் உள்ள இடங்கள் எவை என்பது குறித்து அறிவிப்பு பலகை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கங்கை நதியை சுத்தப்படுத்தும் அமைப்பிடம், எங்கு குளிப்பது ? எங்கு குடிப்பது ? என்ற அறிவுப்பு பலகையை வைக்குமாறு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு இடத்தில் இந்த பலகை இருக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சிகரெட் பெட்டிகளில் ஆபத்து எச்சரிக்கை இடம் பெற்றிருக்கும் நிலையில், கங்கை நதிக்கரையோரம் ஆபத்து எச்சரிக்கை இடம் பெற்றிருப்பதில் தவறு என்ன இருக்கிறது என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் ஹரித்வார் முதல் உன்னாவ் வரை கங்கை நதியின் தரம் மோசமாக உள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது.