யமுனா நதியில் ஏற்பட்டு வரும் மாசுவை கட்டுப்படுத்துவது மற்றும் தூய்மை செய்வது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யமுனா நதி மற்றும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கவும், கழிவுகளை கொட்டவும் நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். மீறினால் ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், இதனை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
யமுனா நதியில் கழிவுகளை கொட்டும் தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசு மற்றும் முனிசிபல் கார்ப்பரேசனுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.