வெள்ளம் புதியதலைமுறை
இந்தியா

பேரிடர் நிவாரணம் | ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதியுதவியை அளித்தது மத்திய அரசு

5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடி கூடுதல் தொகையை மத்திய உதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

PT WEB

ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு கூடுதல் மத்திய நிதியுதவியை அளித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நிலச்சரிவுகள் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடி கூடுதல் தொகையை மத்திய உதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது SDRF-ல் கிடைக்கும் ஆண்டுக்கான தொடக்க நிலுவைத் தொகையில் 50% சரி செய்தலுக்கு உட்பட்டது.

தேசிய பேரிடர்

மொத்த தொகையான ரூ.1554.99 கோடியில் ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடி,தெலுங்கானாவிற்கு ரூ.231.75 கோடி மற்றும் திரிபுராவிற்கு ரூ.288.93 கோடி ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன.