ECI x page
இந்தியா

25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு

உள்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைச் சீரமைக்கும் நோக்கில் இந்தத் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்களுக்கான தேசிய மாநாட்டை வரும் பிப்ரவரி 24, அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்த உள்ளது. உள்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைச் சீரமைக்கும் நோக்கில் இந்தத் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான இத்தகைய மாநாடு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டில் கடைசியாக நடைபெற்றது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த மாநாடு நடைபெறும். அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள், அவர்களது சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 36மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள்.

ECI

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே தேர்தல் நடைமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குதல். தேர்தல் ஆணையத்தின் புதிய டிஜிட்டல் தளமான ECINET, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து ஆலோசித்தல். வாக்காளர் தகுதி மற்றும் தேர்தல் சட்டங்கள் குறித்த சட்ட ரீதியான ஆலோசனைகளை மேற்கொள்ளுதல், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையங்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைச் சீரமைக்கும் நோக்கில் இந்தத் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.