மகாராஷ்டிரா முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா | பள்ளி மாணவர்களின் பைகளில் கத்தி, சைக்கிள் செயின்.. அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்டிராவில் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பைகளில் கத்தி , சைக்கிள், செயின், சீட்டு கட்டு, ஆணுறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருப்பது பள்ளி நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திடீரென ஆசிரியர் மாணவர்களின் பைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது 8 - 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கூர்மையான கத்திகள், சீட்டு கட்டு, சைக்கிள் செயின் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து பள்ளியின் முதல்வரிடத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இதுபோன்ற பொருகளை எடுத்த வருவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இதை கொண்டுவந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் தெரிவிக்கையில், "திடீர் சோதனையின் போது, ​​இரும்புப் பொருட்கள், கத்திகள் மற்றும் சங்கிலிகள் ஆகியவற்றைக் கண்டோம். இதுபோன்ற பொருட்கள் பொதுவாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களிடத்திலும் நாங்கள் தெரிவித்தோம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் நாங்கள் விளக்கியுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சிகை அலங்காரங்கள் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமின்றி சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.