இந்தியா

'எனக்கு அரசியல் கலந்த மதம் தேவையில்லை' - தலிபான்கள் குறித்து நடிகர் நசீருதீன் ஷா

கலிலுல்லா

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது குறித்து இந்திய முஸ்லீம்கள் சிலர் வரவேற்பு தெரிவித்ததற்கு மூத்த நடிகர் நசீருதீன் ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முஸ்லீம்களில் சிலர் அந்த காட்டுமிராண்டி கும்பலை கொண்டாடுவது ஆபத்தானது.

நான் ஒரு இந்திய முஸ்லீம், பல வருடங்களுக்கு முன்பு மிர்சா காலிப் கூறியது போல், என் கடவுளுடனான எனது உறவு முறைசாராதது. எனக்கு அரசியல் கலந்த மதம் தேவையில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.