இந்தியா

யோகி முதலமைச்சரானது உ.பி.க்கு நல்லது: பாக்., பாடகி சொல்கிறார்

யோகி முதலமைச்சரானது உ.பி.க்கு நல்லது: பாக்., பாடகி சொல்கிறார்

webteam

யோகி ஆதித்யநா‌த் முதலமைச்சராகி இருப்பது உத்தரப் பிரதேசத்திற்கு நல்லது என்று பாகிஸ்தான் நாட்டு பாடகி நரோதா மாலின் தெரிவித்துள்ளார்.

கராச்சி நகரில் வசிக்கும் பாடகி நரோதா மாலினி, கடந்த 15ஆம் தேதி பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்து மதப் பாடல்களைப் பாடியதாகவும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மெய்மறந்து பாடல்களை ரசித்ததாகவும் நரோதா தெரிவித்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சராக ஆதித்யநாத் பொறுப்பேற்றது குறித்து கருத்து தெரிவித்த நரோதா, உ.பி.,க்கு இனி நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார்.