இந்தியா

2022க்குள் ஏழைகளுக்கு வீடு: வாரணாசியில் மோடி பேச்சு

webteam

2022ம் ஆண்டுக்குள் நகரம் கிராமம் என்ற வேறுபாடின்றி ஏழைகளுக்கு வீடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தூய்மையே சேவை பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த விவசாயிகளின் பொதுக்கூட்டத்தில் பேசினார். நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே சிறந்த நிர்வாகத்திறன் என்ற மோடி, 2022ஆம் ஆண்டுக்குள் நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். 
நாட்டின் நிர்வாகம் என்பது தேர்தலில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது அல்ல, தேசநலனே பிரதானம் என்பதுதான் அது என்றும் மோடி கூறினார்.

சில அரசியல்வாதிகள் ஓட்டுகளைப் பெறுவதற்காக மட்டுமே பணியாற்றுவதாகவும், தேசநலன்தான் அதிகபட்ச முன்னுரிமை என்ற கலாசாரப் பின்னணியில் வந்தவர்கள் தாங்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.