சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் பதவிக் காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. ஆகவே இவர் முப்படைகளின் முதல் தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெஃப்டினென்ட் ஜெனரல்மனோஜ் முகந்த் நராவனே பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் துணை ராணுவ தளபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பதவிக்கு வருவதற்கு முன், கிழக்கு ராணுவத்தின் தலைவராக பதவி வகித்தார். 37 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் நராவனே, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் பணிகளில் திறமையாக பணியாற்றியவர். இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையிலும் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பாக படையை நடத்திச் சென்றதற்காக சேனா விருதும், நாகாலாந்தில் அசாம் ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றியபோது விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றவர். இதேபோல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.